கற்பென்பதை
ஆணுக்கும், பெண்ணுக்கும் பொதுவில் வைப்போம், என்றான் பாரதி. அந்த
வரிசையில் நட்பையும் சேர்த்துக் கொள்வோம். ஆணும், ஆணும்... பெண்ணும்,
பெண்ணும் கொள்வது மட்டும் நட்பல்ல. ஆணும், பெண்ணும் இயல்பாக பழகுவதும்
நட்பு தான். நட்பு என்பது மனதுக்கு தரும் மரியாதை. இதமான தோழமையும்,
இறைவனும் ஒன்று தான். அங்கே சரணாகதி அடையலாம். நட்பின் புனிதம்
காக்கப்படும். பொருள் கொடுப்பதல்ல... பொறுமையாய் நமது உணர்வுகளுக்கு
வடிகால் தருவதே உன்னத நட்பு. நீரற்ற குளத்தில் பறவைகள் தங்காது. பொருளற்ற
சூழ்நிலையில் உறவுகள் தங்காது. எதுவுமற்ற நிலையிலும் நல்ல நட்பு மட்டும்
மாறாது. இங்கே மனதோடு மட்டுமே மனம் பேசும்.
No comments:
Post a Comment