Wednesday 29 February 2012

உஷாரா இருங்கள்

மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார்(28). இவர் இலங்கையைச் சேர்ந்த சரோஜினி தேவி(35) என்பவரை பேஸ்புக் மூலம் காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் சிவக்குமார், மதுரைக்கு கிளம்பி வருமாறும் திருமணம் செய்து கொள்ளலாம் எனவும் சரோவிஜியிடம் தெரிவித்துள்ளார். இவர்கள் இருவரும் மதுரை கூடல்அழகர் பெருமாள் கோயிலில் 10.12.2011 அன்று திருமணம் நடைபெற்றுள்ளது. அதன் பின்னர் சம்பாதிப்பதற்காக சிங்கப்பூர் சென்று இருவரும் குடியேறி உள்ளனர். அங்கு சரோஜினியின் ஐபோன், ஐபேர்ட், விசா கார்ட், லேப்டாப் ஆகியவற்றை திருடுக் கொண்டு சிவக்குமார் தலைமறைவாகி உள்ளார். மேலும் போலி பெயர்களில் சரோஜியின் ஆபாச படங்களை பேஸ்புக்கில் வெளியிட்ட சிவக்குமார், சரோஜினியை மிரட்டி உள்ளார். இது தொடர்பாக மதுரை கமிஷ்னரிடம் சரோஜினி புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவக்குமாரை தேடி வருகின்றனர்.

plz takecareeeeeeeeeeee

No comments:

Post a Comment