Friday 23 March 2012

நமது வாழ்வை சிறப்பாக்கும் வழிகள் ......

நம்பிக்கை!
விழித்து எழு!
வென்றுவிடுவோம் என்ற நம்பிக்கை உன்னுள்ளே பிறக்கட்டும் உன்னுடைய உடம்பின் ஒவ்வொரு அணிவிலும் இந்த நம்பிக்கைப் பரவட்டும். அப்படிச் செய்தால்தான் உன்னால் எதையும் சாதிக்க முடியம்.
நீ ஆயிரம் மருந்துகளை உன்னுடைய வியாதிகளின் பொருட்டுச்சாப்பிடலாம். ஆனாலும் நோயில் இருந்து மீண்டுவிட வேண்டும் என்ற தளராத நம்பிக்கை உனக்கு இல்லாமல் போய்விட்டால் நீ குணம் அடைவது முடியாத ஒரு விஷயம் தான்.
பொறுமை!
நீ ஒரு போதும் உணர்ச்சி வசப்படாதே! உணர்ச்சி வசப்படுவதால் பரபரப்பு ஏற்படுகிறது. அதற்கு இடம் தராதே!
உன்னுடைய பொறுமையை இழக்காதே!
எரிச்சல் அடையாதே!
உனக்கு எப்படிப்பட்ட சூழ்நிலை ஏற்ப்பட்டாலும் நிர்ச்சலனமாக இருக்கப் பழகிக்கொள்.
கோபம்
மற்றவர்கள் உன்னை எப்படி நடத்தினாலும் நீ கோபத்துக்கு மட்டும் இடம் தரக்கூடாது.
சோர்விலே எச்சரிக்கை
நீங்கள் மிகவும் சோர்ந்து போய் இருக்கும் போது ஒருபோதும் தூங்கச் செல்லவேண்டாம். இடையிடையே ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். இத்துடன் உங்களால் முடிந்த மிக எளிமையான உடல் பயிற்சிகளைச செய்யுங்கள். உங்களுக்கு மீண்டும் புத்துணர்ச்சியைத் தரக்கூடிய உங்களுக்குப் பிடித்தமான எதையாவது படியுங்கள்.
உங்களுக்கு மிகவும் பிடித்த இசையைக் கேளுங்கள். சுடச்சுட ஒரு கோப்பைப் பால் அருந்துங்கள்.
உதவியும் இன்பமும்!
உன்னிடம் உள்ள கடவுள் உணர்வு ஒன்றுதான் உனக்குக் கிடைக்கும் உணைமையான ஒரே உதவி. அது ஒன்றுதான் உண்மையான மகிழ்ச்சி.
சுயநலம்
மனிதர்கள் அந்தக் கடவுளுடைய சக்தியைக் கொண்டு தான் இன்று வரை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவற்றைத் தங்களுடைய சொந்த நோக்கங்களுக்காகவும் சுயநலமான திட்டங்களுக்காகவும் தான் பயன்படுத்துகிறார்கள்.
இறை உணர்வு
நீ தியானம் செய்வதன் பொருட்டுத தனிமையான இடத்தில் அமர்ந்தாலும் சரி, ஏதாவது ஒரு வேலையை மேற்கொண்டு அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தாலும் சரி. உனக்குத் தேவையான ஒரே விஷயம் இறைவனைப்பற்றிய இடைவிடாத உணர்வுதான்.
இறைவனுக்கே காணிக்கை
நீ பகுத்தறிவு சம்பந்தப்பட்ட முயற்சிகளைச் செய்தாலும் சரி
செயலாற்றக் கூடிய திட்டங்களை சம்பந்தப்பட்ட முயற்சிகளாக இருந்தாலும் சரி.
அல்லது வேறு எவ்வகைப்பட்ட முயற்சிகளாக இருந்தாலும் சரி.
அவற்றை எல்லாம் மறக்காமல் இறைவனுக்கு அர்பணிக்கவேண்டும் என்பதை உன் குறிக்கோளாக வை.
நீ செய்யக்கூடியவை அத்தனையும் இது இறைவனுக்கே காணிக்கை என்ற உணர்வுடன் செய்.
இதுவே உனக்கு மிகச்சிறந்த ஒழுக்கத்துக்குறிய முறை. இதுமட்டுமல்லாமல், பலப்பல முட்டாள்தனமான வீணான செயல்களைச் செய்வதிலிருந்து அது உன்னைத் தடுத்து விடும்.
மௌனம்!
மனிதர்கள் பேசாமல் இருக்கக் கற்றுக்கொண்டால், எத்தனை எத்தனையோ தொல்லைகளைத் தவிர்த்துவிடலாம். எப்போதும் அமைதியாக இருந்து வலிமையைத் திரட்டுவாயாக!
இவ்வாறு செய்தால் அது வேலை செய்வதற்கு மட்டுமல்ல, உருமாற்றம் அடையவும் உதவும்.
தன்னம்பிக்கை
ஒரு மனிதனுக்குத் தன்னிடத்திலே அசைக்க முடியாத நம்பிக்கை மட்டும் இருந்தது என்றால் , அவனால் எல்லாவித்த் துன்பங்களையும், என்ன விதமான சூழ்நிலைத் துயரங்களையும், மிகமிக மோசமானவை என்று கருதப்படுபவன்ற்றையும் எதிர்த்து நிற்க முடியும்.
இதற்குத் அவனுக்குத் தேவை ஊக்கமும், மனம் உடையாத மனோநிலைமையும் கூடத்தான்!
யோகத்தில் அடியெடுத்து வைக்க…
ஒருவன் யோக மார்க்கத்தில் அடியெடுத்து வைக்க வேண்டுமென்றால் அவனுக்கு ஒரு சில விஷயங்கள் எப்போதும் கவனத்தில் இருக்க வேண்டும்.
1. விடியற்காலையில் எழு.
2. அந்த நாளை இறைவனுக்கு அற்பணி.
3. நீ நினைப்பதையும், நீ செய்ய இருப்பதையும் அவனிடம் ஒப்படை.
4. இரவில் படுக்கைக்குப் போகும் முன், அன்றையத் தினத்தைப் பற்றி முழுமையாக எண்ணு.
5. என்னென்னவெல்லாம் செய்தாய் என்று நினைத்துப்பார்.
முதலில் உன் குறையை நீக்கு!
பிறமனிதர்கள் விஷயத்தில் நீ எதையாவது செய்ய வேண்டும் என்று விரும்பினால் அதை முதலில் உன் விஷயத்தில் கடைப்பிடிக்க வேண்டும்.
மற்றவர்களுக்கு ஒரு நல்ல புத்திமதியை வழங்குவதற்கு முன்னால் அந்தப் புத்திமதியை உனக்கே நீ சொல்லிக் கொள்ள வேண்டும்.
அந்த புத்திமதிப்படி நீயே நடந்துகொள்ளவேண்டும். நேர்ந்தால் அதை நீக்கக்கூடிய மிகச் சிறந்த வழி முதலில் அவ்விதமான சிக்கலை உன்னிடமிருந்து நீ விலக்குவதுதான்.
மற்றவர்களிடத்தில் நாம் என்ன விதமான குறையினைக் காண்கிறோமோ அதே குறை நம்மிடம் இருக்கிறது. என்பதை நம் உணரவேண்டும். அதன் பிறகு நம்மிடம் இருப்பதை நீக்குவதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டும்.
நம்மிடமிருந்து அது முற்றிலும் நீக்கப்பட்டபிறகு மற்றவருடைய குறையை மாற்றக்கூடிய வலிமையினை நாம் அடைந்துவிடுகின்றோம்!
கடவுள் உன்னுடன் இருக்க…
கடவுளை மட்டும் நீ நினை. கடவுள் உன்னுடனே இருப்பார்.
தவறு – தவறு தவறுக்கு மேல் தவறு!
ஒரு மனிதன் என்ன செய்கிறான் என்பதைப் பற்றி வெட்டிப் பேச்சு பேசுவது தவறு.
என்ன செய்யவில்லை என்பதைப் பற்றி வெட்டிப் பேச்சு பேசுவது தவறு.
அவ்வாறான வெட்டிப்பேச்சுகளுக்கு காது கொடுப்பது அதை விடத் தவறு.
அது உண்மைதானா என்று அறிய முயலுவது அதையும் விடத் தவறு.
தவறான வம்புகள் நிறைந்த ஒரு பேச்சுக்குப் பதிலுக்குப் பதில் பேசுவது தவறினும் தவறு.
உன்னை மாற்றிக்கொள்!
மற்றவர்களுடைய விஷயங்களில் எப்பொழுதும் தலையிடாமல் இருப்பது நல்லது. மனிதர்கள் மற்றவர்களின் விஷயங்களில் கண்டபடி தலையிட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.
கேட்காவிட்டாலும் கூடத் தங்களுடைய அபிப்ராயத்தைச் சொல்லக்கூடிய பழக்கம் தான் இதற்கெல்லாம் காரணம்!
மனதில் உறுதி வேண்டும்
ஒரு காரியம் கடினமாக இருப்பதால் அதை எண்ணிப் பயந்துவிட்டு விடக்கூடாது. மாறாக அது எவ்வளவு கடினமாக இருக்கின்றதோ அந்த அளவுக்கு அதில் வெற்றி பெறுவதன் பொருட்டு நாம் அதிகமான உறுதியுடன் இருக்க வேண்டும்.
கடவுளே எல்லாம் செய்பவன்.
நீ தன்னந்தனியாக இருக்கவில்லை. என்பதை ஒரு போதும் மறக்காதே கடவுள் உன்னுடனேயே இருக்கிறான். உனக்கு உதவிக் கொண்டும், வழிக்காட்டிக்கொண்டும் இருக்கிறான்..
அவன்தான் எப்போதுமே கை விடாத துணைவன். தன்னுடைய அன்பினால் நமக்கு ஆறுதலை அளிக்கக்கூடிய வலிமையையூட்டக்கூடிய நல்ல நண்பன்
அவன் மீது நம்பிக்கையை வை! அவன் உனக்கு எல்லாவற்றையும் செய்வான்.!
இரக்கத்தின் சிறப்பு:
இப்போது இருக்கக்கூடிய உலகத்தில் தர்மத்தைச் செய்வதுதானம் அன்பிற்குச் சிறந்த அடையாளம் என்று கூறமுடியாது. ஆனால் ஏதாவது ஒரு பொருளைக் கொடுப்பதன் மூலமாகவோ, வேறு வகையிலோ நம்முடைய அன்பினை வெளியிடும் போது நம்முடைய அன்பானது மற்றவருடைய அன்பையும், நட்பையும் பெறுவதிலே உலகத்திலே மிகச்சிறந்த சக்தியாக வேலை செய்கின்றது.
பலமும்- பலஹீனமும்!
எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் சரி, அதை அமைதியான முறையில் எடுத்துச் சொல்லுவதே எப்போதும் வலிமைக்கு அடையாளம் ஆகும்.
கடுகடுவென்று வெடித்து விடுவது பலஹீனத்தின் அடையாளம் ஆகும்.
விலகி இருத்தல்
எப்பொழுதும் அமைதியுடன் இரு. அமைதி இழக்கும் படியான சோதனைகள் எல்லாம் வரக்கூடிய காலத்தில் எல்லாம் அதை எதிர்த்து நில்.
விலகி நிற்காமல் எதையும் முடிவு செய்ய வேண்டாம்.
தற்புகழ்ச்சி
தற்புகழ்ச்சி செய்து கொள்ளுதல் என்பது முன்னேற்றத்துக்குப் பெரும் தடைகளாக உள்ளவற்றுள் ஒன்று.
உண்மையான முன்னேற்றத்தின் மீது ஆர்வம் இருந்தால் இந்த முட்டால் தனத்தைக் கவனமாகத் தவிர்க்க வேண்டும்.
இரண்டு வழிகள்
யோகத்திலே இருக்கும் வழிகள் இரண்டே இரண்டுதான்.
1. தவம் செய்தல்
2. சரண் அடைதல்
மகிழ்ச்சி தரும் விஷயம்
எந்தவிதப் பற்றும் இல்லாத தூய பக்தியைப்பொல வேறு எதுவும் மகிழ்ச்சியை அளிக்காது.
அருள்
அருள் என்பது என்றுமே நம்மைக் கை விடுவது இல்லை. இந்த நம்பிக்கையை நம்முடைய உள்ளத்திலே எப்போதும் நாம் கொண்டிருக்கவேண்டும்.
அரும் மருந்து
ஒரு நோயாளியின் நம்பிக்கை ஒன்றுதான் அவனை நோயிலிருந்து குணமாக உதவக்கூடிய சக்தியைத் தரும் அரும் மருந்து.
குறைகள்!
எப்போதும் மற்றவர்களுடைய குறைகளைப் பற்றிப் பேசுவது என்பது தவறு எனபதிலே சிறிது கூடச் சந்தேகமே இல்லை.
எல்லாரிடமும் கறைகள இருக்கத்தான் செய்கின்றன. அவற்றைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பது மட்டும் அவற்றைப் போக்க நிச்சயமாக உதவாது.
மாபெரும் வலிமை!
ஒருவர் மௌனமாக இருக்கக்கூடிய திறனை மட்டும் வளர்த்துக் கொண்டாரேயானால் அதிலேயே பெரிய வலிமை இருக்கிறது.
பிரகாசமான எதிர்காலம் அமைய..
நீ எப்போதும் இரக்கத்தை உடையவனாய் இரு. உனக்குத துன்பமே நேராது. எபுபோதும் திருப்தியுடனும்,சந்தோஷத்துடனு​ம் இரு. கடுமையான விமர்சனத்தைத் தவிர்த்துவிடு. எல்லாற்றிலும் தீமையைக் காண்பதையும் தவிர்த்துவிடு. சாந்தியோடு கூடிய நம்பிக்கையும், பிரகாசமான எதிர்காலமும் அமையும்.
கடவுளின் உதவி வேண்டுமா?
கடவுளின் உதவியானது எப்போடுத் இருக்கிறது. நீ தான் உன்னுடைய ஏற்றுக் கொள்ளக்கூடிய திறனை உயிர்த்துடிப்புடன் வைத்துக் கொண்டு இருக்க வேண்டும். எந்த மனிதனாலும் ஏற்றுக் கொள்ளக்கூடியதையும் விட மிக அதிக அளவிலே கடவுளின் உதவியானது இருக்கிறது.
சிறந்த மகிழ்ச்சி தேவையா?
இறைவனுக்குத் தொண்டு செய்யுங்கள். இதைவிட சிறந்த மகிழ்ச்சி வேறு இல்லை.
இறைவனிடம் விட்டு விடு!
இறைவனிடம் உனக்குத் தூய்மையான கலப்பு இல்லாத அன்பு இருப்பதால, மற்றவர்களுடைய மனத்தாங்கள், கெட்ட எண்ணங்களை ஆகியவற்றில் இருந்து உன்னை எப்படிக் காப்பது என்பதை அவனிடமே விட்டுவிடு.
அழகு இருக்க வேண்டும்!
நம்முடைய அன்றாட வாழ்க்கையில் அழுக, ஒழுங்கு ஹார்மோனி என்று கூறப்படும். இசையை ஆகியவற்றின் அவசியத்தை உயர்வாக மதிக்க வேண்டும். உதாரணமாக நம்முடைய உடைகளை நல்ல முறையில் பராமரித்தல், நம்முடைய புத்தகங்களை அடுக்கி வைத்தல், நம்முடைய சமையல் பாத்திரங்கைப் பராமரித்தல், ஆகியவற்றிலும் கூட அழகும் ஒழுங்கும் இசைமையும் இருக்க வேண்டும்.
தவறை உணருங்கள்!
நீ ஒரு தவறைச் செய்துவிட்டாய் என்றால் அந்தத் தவறு தவறுதான் என்று உன்னால் உணரப்பட்டு அதற்காக நீ வருந்தினால் அந்தத் தவறானது கண்டிப்பாக மன்னிக்கப்பட்டு விடும்.
இன்பத்தைக் காண முடியாதவர்கள்!
முயற்சிதான் மகிழ்ச்சியை அளிக்கிறது. முயற்சியினை எவ்வாறு செய்வது என்பதை அறியாத மனிதன் தான எப்போதும் மகிழ்ச்சி இல்லாத மனிதனாக இருக்கிறான்.
ஒருவன் தன் வாழ்நாளின் துவக்கத்திலே இருந்தே சோம்பேறியாக இருப்பவர்களை ஒரு போதும் இன்பத்தைக் காணமாட்டார்கள்.
நோய்வாய்ப்பட கிருமிகள் காரணமல்ல!
சந்தேகம்.
மனம் சோர்வடைதல்
தன்நம்பிக்கை இல்லாத தன்மை
சுயநலத்துடன் தன்னையே கருத்தில் கொள்ளுதல்
இவை எல்லாம் ஒரு மனிதனைத் தெய்வீக ஒளியில் இருந்தும், சக்தியில் இருந்தும் உன்னைத் துண்டித்து விடுகின்றன.
பகை சக்திகளின் தாக்குதலுக்குச் சாதகமாக இருக்கின்றன. நீ நோய்வாய்ப்படுவதற்குக் காரணம் கிருமிகள் அல்ல. இது தான் காரணம்.
சிற்றின்பத்தை நீக்கு
சிற்றின்பம் என்பது மனிதனை மயங்க வைக்க்கூடிய வக்கரித்த ஒரு வேஷம். இது நம்மை நம்முடைய இலக்கிலிருந்து விலகிச் செல்லச் செய்கின்றது.
நாம் உண்மையைக் காண்பதில் ஆவல் உள்ளவர்களக இருந்தால் , நாம் அதை நாடக்கூடாது.
பயப்படாதே!
நீ உன்னை நன்றாக கவனித்துப் பார்!
நீ பயத்தை உன்னிடம் அனுமதிக்கின்ற போது நீ எதைக் கண்டு பயப்படுகின்றாயோ அதை வரவேற்கும் ஆளாக மாறிவிடுகின்றாய்.
நீ நோயைக் கண்டு பயப்படும்போது நீ நோயை வருமாறு அழைக்கிறாய்! இதுதான் தினந்தோறும் நடைபெறக்கூடிய அனுபவமாகின்றது. இதைக் கொஞ்சம் சிந்தனை செய்தால் இது விளங்கும்.
நீ உனக்கு நீயே எதைக்கண்டும் பயப்படுவது மடமை என்று கூறிக்கொள்ள வேண்டும்.
உன் வாழ்க்கை அமைதியடைய….
இரக்கத்துடன் கூடிய புன் முறுவலுடம் எல்லாவற்றையும் பார்ப்பாயாக! உனக்கு எரிச்சலையூட்டக்கூடிய விஷயங்களை யெல்லாம் உனக்கு கிடைத்த பாடமாகக் கருது.
அப்போது உன்னுடைய வாழ்க்கையானது அதிக அமைதியுடையதாகவும், அதிக பயன் உடையதாகவும் இருக்கும்.
முன்னேறிச் செல்!
யோகப் பாதையில் நீ ஒரே தடவை அடியெடுத்து வைத்துவிட்டாய் என்றால், உன்னுடைய உறுதியானது எஃகைப் போல் இருக்க வேண்டும்.
எவ்வளவு துன்பங்கள் உனக்கு எதிரிடையாக வந்தாலும் நீ உன்னுடைய இலட்சியத்தை நோக்கி முன்னேறிச் செல்ல வேண்டும்.
துணிவு ஏற்பட…
நாம் கடவுளுடைய அருளின் மேலே முழுமையான ஒரு நம்பிக்கையை வைக்கும் போது நாம் திடமான , உறுதி வாய்ந்த ஒரு துணிவினைப் பெறுகின்றோம்
நேர்மையாய் இரு..
நேர்மையாக இருப்பதிலே ஒரு ஆதிதமான மகிழ்ச்சி உண்டாகின்றது. ஒவ்வொரு நேர்மையான செயலிலும் பரிசு உள்அடங்கியே இருக்கிறது.
தற்கொலை செய்யாதே!
உபயோகம் இல்லாத பேசப்படக்கூடிய ஒவ்வொரு சொல்லும் ஆபத்து நிரம்பிய வம்புப் பேச்சே! கெட்ட எண்ணங்களுடன் பேசக் கூடிய ஒவ்வொரு சொல்லும். ஒவ்வொரு அவதூறு நிரம்பிய பேச்சும் மட்டமான கீழ்த்தரமான மொழியிலே நாகரிகமில்லாத சொற்களில் சொல்லப்படும்போது அது உன்னையே நீயே தற்கொலை செய்து கொள்வதற்குச் சமமானது ஆகும்.
முயற்சிக்கும் பலன் உண்டு
எந்த முயற்சியை நீ செய்தாலும் அது ஒரு போதும் வீண் ஆவதில்லை. அதற்கு நிச்சயமாக்ப் பலன் கிடைத்தே தீரும். ஆனால் அந்த பலனை நம்மால் உணரமுடிவதில்லை.
வெற்றியடைய வழி!
இறைவனுடைய பணியிலே ஈடுபட்டிருப்பது தான் உன்வெற்றி அடைவதற்கு மிகவும் நிச்சயமான வழி.
குறிக்கோளை வைத்தே வாழ்க்கை!
குறிக்கோள் இல்லாத வாவு என்பதே பரிதாபமான ஒரு வாழ்வாகும். உங்களுடைய ஒவ்வருவருக்கும் ஒவ்வொரு குறிக்கோள் உண்டு.
ஆனால் மறந்துவிடாதீர்கள். உங்களுடைய குறிக்கோளின் தன்மையைச் சார்ந்து தான் உங்களுடைய வாழ்க்கையின் தன்மையும் அமையும்.
பகை தேவை!
ஒரு மனிதனுக்குப் பகை சக்திகள் இருப்பது தேவை என்று கூடச் சொல்ல்லாம். அவை உன்னுடைய மன உறுதியை வலுப்படுத்தப்படுகின்றன.
பணத்தைப்பற்றி…
பணம் எப்போதும் வழி தவறிப் போகின்றது ஏன் என்றால் அது பகைச் சக்திகளின் பிடியில் இருக்கிறது.
இறைவனின் அன்பு
இறைவனின் அன்பினிலே எல்லா ஆதரவினையும், எல்லா ஆறுதலையும் எப்போது காண்கிறோம்.
தியானம் ஏன் செய்ய வேண்டும்?
தெய்வீகச்சக்தி உன்னைத் திறப்பதற்காக நீ தியானம் செய்யலாம்.
பேசாதே!
எப்போதும் நீ சொல்லுவதையே செய்ய வேண்டும். ஆனால் செய்பவை எல்லாவற்றையும் பற்றிப் பேசுவது என்பது அறிவுடமை ஆகாது. நீ பேசும் போது எப்போதும் உணைமையே பேச வேண்டும். ஆனால் சில சமயங்களில் பேசாமல் இருப்பது தான் நல்லது.
பணிவுடம் இரு!
உண்மையான ஞானம் பெறுவதற்குரிய நிபந்தனை என்னவென்றால் ஆரோக்கியமான பணிவுதான்.
கடவுள் உன்னை தாங்குகிறார்
உன்னை பேணி வளர்க்கிறார்
உனக்கும் உதவுகிறார்.
உனக்கு அறிவூட்டுகிறார்
உனக்கு வழிகாட்டுகிறார். இவ்வாறெல்லாம் அவர்தான் செய்கின்றார் என்று நம்பி நீ பணிவுடன் இருக்க வேண்டும்.
பக்தி என்றால் என்ன?
பக்தி என்றால் தனதாக்கிக் கொள்ளுவது அல்ல. தன்னை அர்பணித்துக் கொள்ளுவது தான் பக்தி.
முன்னேற்றம் அடைய….
கடவுளின் அருளை நோக்கிச் செய்யப்படக்கூடிய ஆர்வமுடைய நேர்மையான பிரார்த்தனை எதுவும் வீணாவதே இல்லை. தொடர்ந்து ஆர்வத்துடன் இரு.
மிகச்சரியான முன்னேற்றம் வந்தே தீரும்.
குறைகூறுவதை நிறுத்த…
நீ உபயோகப்படுத்தும் வித்த்தில் பத்து நிமிடங்கள் பேச வேண்டும் என்று கருதினால் அதற்காகப் பத்து நாட்கள் மொனத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.
உன்னுடைய பேச்சிலே எவ்விதக் கட்டுப்பாடும் இல்லாமல் வெளிப்படக்கூடிய குறை கூற்க்கூடிய பழக்கத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்.
அவ்வாறு செய்ய வேண்டுமானால் பின் வருவனவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும்.
1. அவ்வாறான உணர்வு நிலையில் இருக்கும் போது நீ ஒரு போதும் பேசாதே. தேவை என்றால் உடல் அளவில் பேசமுடியாதபடி ஆக்கிக்கொள்.
2. உன்னையே ஆராய்ந்து பார். மற்றவர்களிடத்தில் எவை எல்லாம் சிரிப்புக்கு இடமானவையாக உனக்குத் தோன்றுகிறதோ அவை எல்லாவற்றையும் உன்னிடத்தில் இருப்பதாக அறிந்து கொள்வாயாக!
3. உன்னுடைய இயற்கையிலே அதற்கு எதிரான எண்ணம் விலகி இருப்பதைக் கண்டறிந்து அந்தத் தவறான எண்ணம் விலகி, இந்த நல்ல குணம் வளர வற்புறுத்து.
இயற்கைக் குணம் கீழ் வருமாறு:-
1. நல்ல எண்ணம்.
2. பணிவு.
3. பிறருக்கு நல்லது செய்யும் விருப்பம்.
நேரத்தை வீணாக்காதே
எப்போதும் விழிப்புணர்ச்சியுடன் இருந்து முன்னேறுவதற்கு இன்னும் என்னென்ன வெல்லாம் செய்ய வேண்டும் என்பதைக் கவனி. நேரத்தை ஒரு கணமும் வீண்டிக்காதே!
தனி ஒருவன் செய்ய வேண்டியது என்ன?
ஒருவனுடைய கடந்த காலம் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். அவன் எவ்வளவு வேண்டுமானாலும் தவறுகளைச் செய்திருக்கலாம்.
எவ்வளவு அஞ்ஞானத்தில் வேண்டுமானாலும் வாழலாம். அவனுடைய உள்ளத்தின் ஆழ்த்துக்குள்ளே ஒரு மிக உன்னதமான தூய்மை உள்ளது. அது அற்புதமான சித்தியாக மலர்ந்து வெளிப்பட முடியும்.
ஆள வேண்டியது!
இறைவனுடைய அன்பும், ஞானமும் தான் நம்முடைய சிந்தனைகளையும், செயல்களையும், எப்போதும் ஆள வேண்டும்.
தாங்க முடியும்!
மிகவும் கடுமையான உடல் வேதனை கூட அதை அமைதியடன் எதிர்கொள்ளும் போது கடுமை குறைந்து தாங்கக் கூடியதாக ஆகிவிடுகிறது.
கோபம்
கோபம் என்பது எப்போதுமே முட்டாள்தனமானவற்றைத்தான் பேசவைக்கும்.
பயம்!
பயம் என்பது ஒரு குற்றமாகும். அது குற்றங்களுக்குள் ஒன்று. இந்த உலகத்தில் கடவுளைடைய செயலானது நிறைவேற விடாமல் அதை அழித்துவிட விரும்பக்கூடிய கடவுள் விரோத சக்திகளிடமிருந்து நேரடியாக வருகின்றவற்றுள் ஒன்றுதான் பயம்.
கோபத்தை ஒழிக்கும் வழி!
யாராவது ஒருவர் உன் மீது கோப்ப்பட்டால், அவருடைய கோப அதிர்வுகளிலே நீ அகப்பட்டுக் கொள்ளாமல் விலகி நின்றுவிடு.
எவ்விதமான ஆதரவோ, பதிலோ கிடைக்காவிட்டால் அந்தக் கோபக்கார்ரின் கோபம் ஒழிந்துவிடும்.
நல்லவனாக இரு
நீ நல்லவனாக இரு!
மகிழ்ச்சி உடையவனாக இரு
நீ வேறு எதையும் செய்ய வேண்டாம்!
வேண்டும், வேண்டும்!
நம்முடைய சிந்தனைகள் இன்னமும் அறியாமையிலே தான் இருக்கின்றன. அவற்றை நாம் ஒளி பெறச்செய்ய வேண்டும்.
நம்முடைய ஆர்வமானது இன்னும் குறைபாடுடன்தான் இருக்கிறது. அது தூய்மைப்படுத்தப்பட வேண்டும்.
நம்முடைய செயல்கள் இன்னும் வலிமையற்றவையாகத்தான் இருக்கின்றன. இவை அதிக ஆற்றல் வாய்ந்தவையாக மாற வேண்டும்.
எல்லாவற்றிலும் சிறந்தது!
பேச்சைக் கட்டுப்படுத்துவது என்பது முழு மௌனத்தைவிடச் சிறந்தது, பயன் உள்ள ஒரு விஷயத்தைப்பற்றி மிகமிகத் துல்லியமாகவும் , உண்மையான முறையில்மு சொல்லக் கற்றுக் கொள்வதுதான் எல்லாவற்றிலும் சிறந்ததாகும்
நினைக்காதே!
என்னுடைய அறிவுதான் மிகமிக இறுதியானது. மற்ற எல்லாருடைய அறிவை விட உயர்ந்தது. ஆகவே மற்றவர்கள் சொல்வது தவறு என்று ஒரு போதும் நினைக்கவே கூடாது.
உணர முடியாதவர்கள்!
அன்பைச் செய்கின்றவனால் தான் அன்பு இருப்பதை உணர முடியும். உண்மையான அன்பினால் தங்களைக் கொடுக்க முடியாதவர்களினால் எங்குமே அன்பினை உணர முடியாது.
எந்த அளவுக்கு அன்பு தெய்வீகமாக இருக்கின்றதோ அந்த அளவுக்கு அதை அவர்கள் உணர்வதும் குறையும்.
அமைதி வேண்டும்!
மற்றவர்களுடைய குறைகளைப் பற்றி அதிகமாக நினைக்காதே! அது உதவியாக இருக்காது. உன்னுடைய மனப்பான்மையில் எப்போதும் அமைதியும், சாந்தியும் இருக்கட்டும்.
திரும்பி வரும்!
மற்றவர்களுக்கு தீமைகளையே நினைப்பவர்களுக்குச் சொல்.நீ வேண்டுமென்றே செய்த தீமை ஓர் உருவில் இல்லாவிட்டாலும் மற்றோர் உருவில் உன்னிடம் வந்தே தீரும்.
இறைத் தொண்டு
நாம் வேறு எந்தத் தொண்டிலும் ஈடுபட வேண்டியது இல்லை. இறைவனது தொண்டிலேயே ஈடுபட வேண்டும்.
மிகவும் கஷ்டம்!
ஏழையாக ஒருவன் இருக்கிறான். மற்றொருவன் பணக்காரனாக இருக்கிறான். இந்த ஏழை மனிதனைவிடப் பணக்காரனாக இருப்பவனால், நல்லவனாக –
விவேகம் உள்ளவனாகவோ-
புத்திசாலியாகவோ-
வள்ளல் குணம் கொண்டவனாகவோ – இருப்பது ஆயிரம் மடங்கு மிகவும் கஷ்டமானது.
இறைவன் உன்னோடு!
இறைவனின் பனிபூரண அருளானது வலிமையிலே சாந்தியையும், செயலிலே அமைதியும், எல்லாச் சூழ்நிலைகளிலும் மாறாத சுகத்தையும் தருகின்றது. எப்பொழுதும் கிடைக்கக்கூடியது இறைவனின் பதில் ஒன்றுதான். எப்பொழுதும் மாறாது இருக்கும் அன்பு இறைவனின் அன்பு ஒன்றுதான்!
இறைவன் ஒருவன் மீது மட்டும் நீ அன்பு செலுத்துவாயாக!
இறைவன் எப்போதும் உன்னோடே இருப்பான்.

Wednesday 21 March 2012

வேலைக்கு போகும் பெண்ணா? நீங்க! அப்ப‍ இத கண்டிப்பா படிக்க‍ணு நீங்க

வேலைக்கு போகும் பெண்ணா? நீங்க! அப்ப‍ இத கண்டிப்பா படிக்க‍ணு நீங்க !
இன்றைய சூழலில் ஆணும் பெண்ணும் சேர்ந்து வேலை செய்வது என்பது தவிர்க்க இயலாதது. இப்படிப் பட்ட சூழலில் சக ஆண்களிடம் இருந்து பிரச்ச னைகள் வராமல் இருக்க வேண்டுமெனில் அவர்க ளிடம் பெண்கள் எப்படி நடந்து கொ ள்ள வேண்டும்? பழக்கத்தின் எல்லை எது வரை இருக்கலாம்??
இதோ உங்களுக்கு உதவ சில பயனுள்ள ஆலோசனைகள்!
* நம் உடைகள் எதிரிலிருப்பவரின் உணர்வு களைத் தூண்டாமல் இருப்பது நல்லது. மாடர்ன் ஆக உடுத்தினாலும் நேர்த்தியாக உடுத் துங்கள்.
*முக்கியமாக உடன் வேலை பார்க்கும் ஆண்களிடம் நம்முடைய பர்சனல் விஷயங்களை பங்கு போடாதீர் கள். அங்கேதான் ஆரம்பிக் கிறது பல பிரச்சனைகள்.
*சொந்த குடும்ப விஷய்ங்களுக்கு உடன் வேலைபார்க்கும் ஆண்க ளிடம் ஐடியாக்களைக் கேட்காதீ ர்கள், அட்வாண்டேஜ் எடுக்கமு ன் வருவார்கள்!
*உடன் வேலை செய்தாலும் பர்ச னல் செல் நம்பர்களை யாருக்கு ம் தராதீர்கள். நம்பிக்கைக்குரிய நபர்களை தவிர.
*சில நேரங்களில் உயர் அதிகாரி களே தொல்லைகள் தருவார்க ள். எடுத்தேன் கவிழ்த்தேன் என் று ஹாண்டில் செய்யாமல், பிரச்சனைகள் தீரும் வகையில் மிக ஜாக்கிரதையாகக் கையாளுங்கள்.
ஆண் நண்பர்களிடம் கை குலுக்குவது தவறல்ல, அதற்காக எல்லா வற்றுக்கும் கைக்கொடுப்பது , தொட்டுப் பேசுவது கூடாது.

*உங்களின் பொருளாதார இய லாமை நிலையை உடன் பணிபு ரியும் ஆண்களிடம் கூறாதீர்கள்.
*உடன் பணிபுரியும் ஆண் விமர்சி க்கும் அளவிற்கு உடையணியா தீர்கள்.
*அலுவலகம் என்பது பணிபுரிய மட்டுமே, மற்ற உங்களது தனிப் பட்ட விருப்பங்களுக்கும் குடும்ப பிரச்சனைகளுக்கும் ஏற்ற இடம் அது அல்ல என்பதை நீங்கள் முத லில் உணரவேண்டும்.
* நட்பு ரீதியாக புன்னகைக்கலாம், ஆனால் காரணமில்லாமல் எல் லாவற்றுக்கும் ஆண்களிடம் சிரிக்காதீர்கள்.
* ஒரு ஆணிடம் கை குலுக்கு தல், தேநீர் பருகுதல், இரவு நேரத்தில் வாகனத்தில் செல் லுதல் இவையெல்லாம் நம் அக்கம் பக்கத்தினரால் கூர் மையாக கண்காணிக்கப்படு ம் விஷயங்கள் என்பதை மன சில் வைத்துக்கொள்ளுங்கள்!
ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள தனிப்பட்ட இயல்பு , மன மெச் சூரிட்டி போன்றவற்றை பொறுத்து ஆணிடம் பெண்கள் பழகலாம்.
* உடன் வேலை பார்க்கும் ஆண் தவறாக நடக்க முயற்சிக்கும்போது பெண்கள் கண்டிப்பாக எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். இல்லை யெனில் அதுவே ஆணகளுக்கு மிகப்பெரிய பலம் ஆகிவிடும்.
‘நாம எது செஞ்சாலும் வெளில கமிச்சுக்காம அமைதியாத்தேன் இருக்காங்க ! மத்த விஷயத்தி லேயும் நமக்கு ஒத்துழைப்பாங் க!’ என்று சம்பத்தப்பட்ட ஆண் நினைத்து விடுவான்.
இதனால் பிரச்சனை பூதாகரமாகும்போது பெண்கள் வேலைக்கு போகும் உரிமையை வீட்டில் இழக்கிறார்கள்.
* பெண்களுக்கு சாதகமாக இப்போது நிறைய சட்டங்கள் உள்ளன. பெண்கள் அவற்றை தெரிந்து கொள்வது அவர்க ளுக்கு அதிக பாதுகாப்பு ஏற் படுத்தித் தரும்!.
*தன்னிடம் அன்பாக பேசக் கூடியவர்கள் எல்லோருமே தன்னுடைய வாழ்க்கையை காப்பாற்றப் போகிறவர்க்ள் என்ற எண்ணம் பெண்க ளுக்கு கூடாது. வேலை செய்யும் இடத்தில் ஆண் பெண் உடல் ரீதி யான ஈர்ப்புக ளுக்கு ஆளானால் அதனால் ஏற்படும் பின் விளைவுகள் நிஜமாகவே விபிரீதமாக இருக்கும்.
* ஆபீஸில் குறிப்பாக எந்தவொரு ஆணுடனும் தாழ்வான ரகசியக் குரலி ல் பேசாதீர்கள். இது கேட்பவர்களுக் கும் பார்ப்பவர்களுக்கும் தப்பான அபி ப்ராயத்தை ஏற்படுத்தும்.
* ஜல் ஜல் என்று அதிக மணியோசை கொண்ட கொலுசை தவிர்க்கலாம். அலுவலகத்துக்கு அதிக சத்தம் போடு ம் கண்ணாடி வளையல்களும் வேண் டாமே!
* உங்கள் ஆடை பற்றி (அ) உங்களுக்கு உள்ள திறமை பற்றி பாரா ட்டும் போது ‘நன்றி’ என்று ஸ்டிரெய்ட்டாக சொல்லுங்கள். தேவையி ல்லாமல் வெட்கப்படுவதை தவிருங்கள்.
*யாரிடம் பேசினாலும் கண்ணைப் பார் த்துப் பேசுங்கள், அவர்களையும் அப்ப டியே பேச அனுமதியுங்கள்.
* அரட்டையில் , ஜோக்ஸ் என் ற பேரில் விரச பேச்சுகளை அனுமதிக் காதீர்கள்.
*எதற்காகவும் எந்த பிரச்சனைக்காக வும் அழாதீர்கள், அழும் பெண்களை சுலபமாக ஆண்கள் திசை திருப்பி விடு கிறார்கள்.
* தேவையே இல்லாமல் எதற்கெடுத் தாலும் சத்தமாக சிரிக்காதீர்கள்.
* விழா, விசேஷம் தவிர உடன்வே லை ப் பார்க்கும் ஆணை தேவையில்லா மல் வீட்டுக்கு அழைக்காதீர்கள், நீங்க ளும் செல்லா தீர்கள்.
* ஆண்கள் தனது மனைவியை உங்களோடு ஒப்பீட்டு பேசுவதை யோ அல்லது அவளுக்கு ஒண்ணுமே தெரியாது என்று மதிப்பை குறை த்துப் பேசுவதையோ அனுமதிக்காதீர்கள்.

* ஆண் எந்த நோக்கத்திற்காக உங்களிடம் பேசுகிறான் என்று அவன் நோக்கத்தை அவ ன் வார்த்தைகளிலும் கண்களிலும் இருந்து பெண் கள் புரிந்துக் கொள்ள வேண்டும்.
அதைப்பொறுத்தே ஒரு பெண் ஆணுடம் பழகும் போது அந்த உறவை எவ்வளவு தூரத்தில் வைக்கலாம் என்று வரைமுறை ப்படுத்திக் கொள்ள வேண்டும்.

Sunday 11 March 2012

HOW TO IMPROVE YOUR LIFE

 
 
 
Personality:
1. Don't compare your life to others'. You have no idea what their journey is all about.
2. Don't have negative thoughts of things you cannot control. Instead invest your energy in the positive present moment
3. Don't over do; keep your limits
4. Don't take yourself so seriously; no one else does
5. Don't waste your precious energy on gossip
6. Dream more while you are awake
7. Envy is a waste of time. You already have all you need..
8. Forget issues of the past. Don't remind your partner of his/her mistakes of the past. That will ruin your present happiness.
9.
Life is too short to waste time hating anyone. Don't hate others.
10. Make peace with your past so it won't spoil the present
11. No one is in charge of your happiness except you
12. Realize that life is a school and you are here to learn. Problems are simply part of the curriculum that appear and fade away like algebra class but the lessons you learn will last a lifetime.
13. Smile and laugh more
14. You don't have to win every argument. Agree to disagree.